இரண்டு முறை சுடப்பட்ட பின்னரும் தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட இந்திய ராணுவத்தின் நாய்! - Seithipunal
Seithipunal


தேடுதல் வேட்டையில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்! 

ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள அனந்த்நாக்கில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே திங்கள்கிழமை நடந்த மோதலின் போது ராணுவத்தில் பயிற்சி பெற்ற நாய் ஒன்று பலத்த காயம் அடைந்தது. பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரவு தெற்கு காஷ்மீர் மாவட்டத்தின் டாங்பாவா பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

திங்கள்கிழமை அதிகாலை பயங்கரவாதிகள் தங்கியிருந்த வீட்டிற்குள் இராணுவ வீரர்கள் ராணுவத்தில் பயிற்சி பெற்ற நாயான ஜூமை அனுப்பி உள்ளனர். ஜூம் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு தாக்கியது போது இரண்டு முறை தீவிரவாதிகள் சுட்டதில் காயமடைந்தது. கடுமையான காயங்கள் இருந்தபோதிலும் துணிச்சலாக தாக்கியது.

ஜூம் தற்போது ராணுவத்தின் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூமிக்கு பின் கால் முறிவும், முகத்தில் பிளவு காயங்களுக்கு ஏற்பட்டது. ஜூம் ஆபத்தான நிலையில் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்பொழுது மருத்துவ குழுவில் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறது. இந்த என்கவுன்டரில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian Army dog ​​fought with terrorists even after being shot twice


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->