குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மீண்டும் வலுக்கும் போராட்டம்?.. காவல்துறையினர் உஷார்.!! - Seithipunal
Seithipunal


பெங்களூருவில் சர்ச் தெருவில் இருக்கும் கடைகளில் ஷட்டர்கள், சுவர்கள் ஆகியவற்றில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த காரியத்தை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அதுபோல பெங்களூரு, கர்நாடகா ஆகிய பகுதிகள் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

மங்களூருவில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது கலவரத்தை தடுக்க காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியாகினர். அதே நேரத்தில் மைசூர் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் சுதந்திர காஷ்மீர் என்ற பதாகைகளுடன் கலந்துகொண்டார். 

இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் பெங்களூரு சர்ச் தெருவில் இருக்கும் சுவர்கள் கடைகளில் சர்ச்சைக்குரிய வசனங்கள் எழுதப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு வேண்டாமென்றும், பாஜகவை எதிர்த்தும், மேலும், ஆர்எஸ்எஸ் ஒரு தீவிரவாத அமைப்பு என்றும், சுதந்திர காஷ்மீர் என்றும் எழுதப்பட்டு இருந்தது. 

மேலும், மோடி மற்றும் அமித் ஷா தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், எழுதி இருந்தது. இந்த வாசகங்களை மர்ம நபர்கள் ஆங்கிலத்தில் எழுதி இருந்தனர்.

இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் தெரிவிக்க, இந்த காரியத்தை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian act Ncr amith sha Bangalore police investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->