இண்டிகோ ஏர்லைன்ஸ் சிக்கலில் சிக்கிய இந்தியா! - 8வது நாளாகவும் 41 விமானங்கள் ரத்து!
India trouble with IndiGo Airlines 41 flights cancelled 8th day
இந்தியா முழுவதும் கடந்த ஏழு நாட்களாக இண்டிகோ விமான சேவைகள் பெரும் தடுமாற்றத்திற்குள்ளாகி வருகின்றன. சென்னை விமான நிலையத்திலும் நேற்று பரபரப்பான சூழல் நிலவியது. மும்பை, டெல்லி, ஆமதாபாத், கொல்கத்தா, கவுகாத்தி, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், கோவை, அந்தமான், கொச்சி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு பறக்க இருந்த 38-க்கும் மேற்பட்ட புறப்பாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல் டெல்லி, புனே, மும்பை, கொச்சி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வர இருந்த 33-க்கும் மேற்பட்ட வருகை விமானங்களும் ரத்தாகி, மொத்தம் 71 சேவைகள் நிறுத்தப்பட்டன.இன்றும்,ஏழு நாட்கள் கடந்தும், இண்டிகோ விமான சேவை சீராகாததால், 8-வது நாளாகவும் சென்னை விமான நிலையத்தில் ரத்தான பறப்புகள் தொடர்கின்றன.
இன்று மட்டும் 23 புறப்பாடுகள், 18 வருகைகள் என மொத்தம் 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதையடுத்து பயணிகள் தங்களின் அண்மை பயண விவரங்களை உடனுக்குடன் விமான நிறுவனங்களிடம் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்கள் இதே பிரச்சனையை எதிர்கொண்டுள்ள நிலையில், விமான பணியாளர்களின் பணிநேர வரம்பில் மத்திய அரசு சில தளர்வுகளை வழங்கி இருப்பதாகவும், இதன் விளைவாக 10-ந்தேதிக்குப் பிறகு சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
English Summary
India trouble with IndiGo Airlines 41 flights cancelled 8th day