போலியோ சொட்டு மருந்து செலுத்தும் தினம் மாற்றம் - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


போலியோ நோயினை முற்றிலும் ஒழிக்க, 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வருடம் தோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்தால், இந்தியாவில் ஒழிக்கவே முடியாது என்று இருந்த போலியோ நோயானது, வெகுவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பல பச்சிளம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியமும், எதிர்காலமும் காப்பாற்றப்பட்டது. 

இந்த வருடத்திற்கான போலியோ சொட்டு மருந்து முகாம், வரும் 17 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 17 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை அல்லது 20 ஆம் தேதி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கான தடுப்பூசி போடும் பணிகள் 16 ஆம் தேதி முதல் துவங்கவுள்ள நிலையில், போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில சுகாதாரத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில், " மறு உத்தரவு வரும் வரை போலியோ சொட்டு மருந்து முகாமை தள்ளி வைக்க வேண்டும் என்றும், ஜனவரி 17 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்வு, ஜனவரி மாதம் 31 ஆம் தேதி நடைபெறும் " என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India Polio Vaccine date Changed 31 Jan 2021 Central Health Ministry Announced


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->