ஆந்திராவில் உச்சம், அந்தமானில் மலிவு: மாநிலவாரியாக பெட்ரோல் விலை நிலவரம்!
india petrol disel rate different tamilnadu andhra
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இடையிலான பெட்ரோல், டீசல் விலை வேறுபாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த பதிலில் சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
எங்கு அதிகம்? எங்கு குறைவு?
நாட்டிலேயே ஆந்திரப் பிரதேசத்தில்தான் எரிபொருள் விலை மிக அதிகமாக உள்ளது.
ஆந்திரா (அமராவதி): இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ₹109.74-க்கும், டீசல் ₹97.57-க்கும் விற்பனையாகிறது. (இங்கு டீசலுக்கான வாட் வரி ₹21.56).
அந்தமான் - நிக்கோபார்: நாட்டிலேயே மிகக் குறைவாக இங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ₹82.46-க்கும், டீசல் ₹78.05-க்கும் கிடைக்கிறது. (இங்கு டீசல் வாட் வரி வெறும் 77 பைசா மட்டுமே).
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் விலை நிலவரம் பின்வருமாறு:
சென்னை: ஒரு லிட்டர் பெட்ரோல் ₹101.03, டீசல் ₹92.61.
புதுச்சேரி: ஒரு லிட்டர் பெட்ரோல் ₹96.32, டீசல் ₹86.53.
டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹94.77 ஆக உள்ளது (வாட் வரி ₹15.40).
மாநில அரசுகள் விதிக்கும் 'வாட்' (VAT) வரியின் வேறுபாடே இந்த விலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணம் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
English Summary
india petrol disel rate different tamilnadu andhra