பொய்...பொய்...! Ind -pak சண்டை நிறுத்தத்திற்கும், அமெரிக்காவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை...! - விக்ரம் மிஸ்ரி - Seithipunal
Seithipunal


இந்திய ராணுவம், காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை வேரோடு அழித்தது.இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி எல்லையில் தாக்குதல் நடத்தியது.

இதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அதற்கு பிறகு,  இரு பேச்சு வார்த்தையை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முடிவு குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இந்தியா -பாகிஸ்தான் போர் நிறுத்தப்பட்டதற்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம். இந்தியாவிற்கும்- பாகிஸ்தானுக்கும் இடையே நிரந்தரமான போர் நிறுத்தம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த மிகப்பெரிய அணு ஆயுத போரை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. இதனால் பல லட்சம் மக்கள் உயிரிழந்திருக்க கூடும். இந்தியா- பாகிஸ்தானுக்கு வர்த்தகம் உள்பட நிறைய உதவிகளை செய்தோம். சண்டையை நிறுத்தாவிட்டால், இந்தியா- பாகிஸ்தான் உடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது என தெரிவித்தோம்.

வர்த்தகத்தை தன்னைப் போல யாரும் பயன்படுத்தியதில்லை" என்று தெரிவித்தார்.இதையடுத்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் அறிவித்தார் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது.

விக்ரம் மிஸ்ரி:

இந்த மாதியான சூழலில் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ''இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை'' என்று நாடாளுமன்ற குழுவிடம் விளக்கம் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.இதைப்பற்றிய விவாதம் தற்போது மக்களிடையே மற்றும் அரசியல் ஆர்வலர்களிடையே பெருகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india Pak ceasefire has nothing to do with America Vikram Misri


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->