'ராகுலின் எதிர்மறை சிந்தனை தவறு என்பதை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது': மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என ராகுல் கூறியிருந்தார். ராகுலின் இந்த எதிர்மறை சிந்தனை தவறு என்பதை இந்தியா நிரூபித்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து, பியூஷ் கோயல் கூறியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியா குறித்து ராகுல் போன்ற தலைவர்களின் எதிர்மறை சிந்தனை தவறு என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் பொருளாதாரம் ஒரு இறந்த பொருளாதாரம் என ராகுல் கூறுகிறார். ஆனால், கடின உழைப்பாளிகளான 140 கோடி இந்தியர்கள் இந்திய பொருளாதார வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை உலகிற்கு மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளனர் என்றும், இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், தற்போது இந்தியாவுக்கு என்ன ஆற்றல் உள்ளது.? பொருளாதாரம் எவ்வளவு வலிமையானது..? இந்தியா எவ்வளவு வேகமாக முன்னேறி வருகிறது என்பது தெளிவாகி உள்ளதாகவும்,  வறுமையை ஒழிக்கும் பணிகள் இந்தியாவில் எவ்வாறு வெற்றிகரமாக செய்யப்படுகின்றன என்பதையும் பியூஷ் கோயல் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2027-ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும், 2047-ஆம் ஆண்டிற்குள் தன்னம்பிக்கை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடாக மாறும் இந்தியா மாறும் என்றும், பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைப்படி, 2047-ஆம் ஆண்டிற்குள் அவரது தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், வரும் 2036-ஆம் ஆண்டில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகளும் முழு வீச்சில் தொடங்கியுள்ளதாகவும்,  இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும், இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்துவதற்கும் நல்ல சூழல் நிலவுகிறதாகவும் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India has once again proven Rahul Gandhis negative thinking wrong says Union Minister Piyush Goyal


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->