இந்தியா - இங்கிலாந்து விமான சேவைகள் இரத்து - மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 100-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 143,556,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரசால் 3,057,781பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 121,931,805 பேர் குணமடைந்துள்ளனர்.  சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்கா மற்றும் பிரேசிலில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,95,041 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் கடந்த  24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் 2,023 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,16,130 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,32,76,039 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,82,553 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களும் தங்களின் மாநில சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் ஊரடங்கை அறிவித்துள்ள நிலையில், வரும் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இந்தியா - பிரிட்டன் இடையேயான விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India England Flights Cancelled till 30 April 2021 due to Corona Second Wave India


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->