ஆப்கானிஸ்தானுக்கு 10வது கட்டமாக மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அமைத்ததில் இருந்து அந்நாட்டின் ஏற்றுமதி, அரசியல் மற்றும் பொருளாதார சூழல்கள் முற்றிலும் மாறியுள்ளன. இதனால் பொருளாதார மந்த நிலை, உணவு நெருக்கடி ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதே உலக நாடுகள் தலிபான் அரசை அங்கீகரிக்காத நிலையில் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு நாடுகள் உதவி வருகின்றன.

இந்நிலையில் இதுவரை 9 கட்டமாக மருந்து பொருட்களை அனுப்பிய இந்தியா, 10வது கட்டமாக உயிர் காக்கும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் உள்ளடக்கிய பொருட்களைை விமான மூலம் எடுத்துச் செல்லப்பட்டு காபூலில் உள்ள இந்திராகாந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு 32 டன் அளவிலான மருந்து பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India delivers 10th batch of medical aid to Afghanistan


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->