இந்தியாவில் இணையவழி குற்றங்கள் 5% அதிகரிப்பு: என்.சி.ஆா்.பி தகவல்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டு 44,735 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. மேலும், 2020-ஆம் ஆண்டு 50,035 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. இதனை தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டில் இணையவழிக் குற்றங்கள் 52,974-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

"2021-ஆம் ஆண்டில் தெலங்கானா, உத்தர பிரதேசம், கா்நாடகம், மகாராஷ்டிரம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தான் அதிக அளவில் இணையவழி குற்றங்கள் பதிவாகியுள்ளன. இவ்வாறு பதிவாகும் குற்றங்களில் மூன்றில் ஒன்றுக்குதான் காவல் துறையினரால் தீா்வு காண முடிகிறது.

இணையவழிக் குற்றங்களில் 60.8 சதவீதம் நிதி உள்ளிட்ட மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கை ரீதியான குற்றங்களும், 8.6 சதவீதம் பாலியல்  ரீதியான குற்றங்களும், 5.4 சதவீதம் மிரட்டுவது மற்றும் அச்சுறுத்துவது தொடர்பான குற்றங்களும் பதிவாகியுள்ளன.

தெலங்கானாவில் 10,303 இணையவழிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன. தகவல் திருட்டு, டெபிட், கிரெடிட் காா்டு மோசடிகள் இணையவழியில் அதிகளவில் நடந்து வருகிறது. மேலும், இணையவழியில் பயங்கரவாதத்தைப் பரப்புவது தொடா்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India cyber crime report 2022


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->