இன்றுடன் நிறைவு பெரும் இந்திய - ஆஸ்திரேலிய ராணுவ கூட்டுப்பயிற்சி.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்கள் இணைந்து கூட்டு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பயிற்சி 'ஆஸ்திரா ஹிந்த்' என்று அழைக்கப்படும். இந்த கூட்டு பயிற்சி இரண்டு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது. 

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கூட்டு ராணுவப் பயிற்சி இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மகாஜன் துப்பாக்கிச்சுடும் பயிற்சிக்களத்தில் கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி ஆரம்பித்தது. 

இந்த ராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது மண்டலத்தின் பதின்மூன்றாவது படைப்பிரிவு வீரர்கள் ராஜஸ்தான் மாநிலத்திற்கு வந்தனர். இந்த பயிற்சியில் இந்தியா சார்பில் டோக்ரா படைப்பிரிவு வீரர்கள் கலந்து கொண்டனர். 

இதற்கு முன்னதாக இரு படைகளின் அனைத்து ஆயுதங்கள் மற்றும் அனைத்து பிரிவுகள் பங்கேற்கும் முதல் கூட்டுப்பயிற்சி இதுவாகும் என்று ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

மேலும், இருதரப்பு ராணுவத்திற்கும் இடையே நேர்மறையான ராணுவ உறவுகளை உருவாக்குதல், ஒருவருக்கொருவர் சிறந்த நடைமுறைகளை உள்வாங்குதல் மற்றும் ஒன்றாக செயல்படும் திறனை மேம்படுத்துதலே இந்த பயிற்சியின் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த பயிற்சியில், இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் டிரோன்களின் செயல்பாடுகள் குறித்து ஆஸ்திரேலியே ராணுவத்தினருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ராணுவ கூட்டுப் பயிற்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

india austreliya join militry exercise today finished


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->