மனைவியை நான்கு நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர கணவன்.. மனதுடைந்து மனைவி எடுத்த விபரீத முடிவு...!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான அநீதிகள் தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு கொலை சம்பவங்கள், பாலியல் வன்முறைகள் போன்ற சம்பவங்கள் பெரும் அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியான ஆய்வுகளின் படி தினமும் சராசரியாக 83 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது. 

தேசிய குற்ற ஆவண காப்பகம் கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் நடைபெற்ற குற்றங்கள் பற்றிய புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் 2018 ஆண்டில் இந்தியாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 91 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன. 33 ஆயிரம் பாலியல் வழக்குகள் பதிவாகி உள்ளன. 

2017 ஆம் ஆண்டைவிட பெண்களுக்கு எதிரான வழக்குகள் 19 ஆயிரம் வழக்குகள் அதிகரித்து 3 லட்சத்து 78 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றத்திற்கு சட்டங்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

இந்த நிலையில், சொந்த கணவனாலேயே மனைவிக்கு ஏற்பட்டுள்ள கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள முஹல்லா பகுதியை சார்ந்த பெண்மணி தனது கணவரின் நண்பர்கள் கணவரின் ஒத்துழைப்போடு தன்னை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பான புகார் கடந்த நவம்பர் மாதத்தின் 19 ஆம் தேதியன்று காவல் துறையினரின் கவனத்திற்கு வந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு பெண்ணின் கணவனை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கொடூர கணவனின் நண்பர்களை காவல் துறையினர் தேடி வந்தனர். 

தற்போது வரை இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதால், லக்னோவில் இருக்கும் முதல்வரின் இல்லத்தில் பெண்மணி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். இவரை தடுத்து நிறுத்திய காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு பின்னர் இந்த வழக்கில் தொடர்புடைய தாசிம் மற்றும் சாதிக் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் மற்றொரு நபரை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in uttar predesh wife forced sexual harassment by his husband


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->