செல்பி மோகம்.. காட்டிற்குள் சென்று கண்முன் தெரியாது ஓடிய சோகம்.. இரண்டு நாட்களுக்கு பின்னர் காத்திருந்த அதிஷ்டம்.!! - Seithipunal
Seithipunal


தென்காசி மாவட்டத்தில் உள்ள தமிழக - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள செங்கோட்டை புளியரை பாதையில் அடர்ந்த வனங்கள் நிறைந்துள்ளது. இந்த மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான அடி உயரம் கொண்டுள்ளது என்பதால், மான், மிளா, காட்டெருமை, யானை, காட்டுப்பன்றி மற்றும் சிறுத்தை போன்ற ஏராளமான வன விலங்குகள் உள்ளது. 

இதுமட்டுமல்லாது கேரள மாநிலத்தின் எல்லையான ஆரியங்காவு பகுதியில் ரோஸ் மலை சுற்றுலா தளமும் இருக்கிறது. இந்த நிலையில், கேரள மாநிலத்தின் கோட்டயம் பகுதியை சார்ந்தவர் சுமேஷ் (வயது 23). இவரது நண்பரின் பெயர் அஜேஷ் (வயது 22). இவர்கள் இருவரும் இப்பகுதியில் உள்ள மலைகளில் ஏறி சுற்றிப்பார்க்க மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளனர். 

இருவரும் செல்பி பிரியர்களாக இருந்து வந்த நிலையில், மலைப்பகுதிக்கு உள்ளே சென்றுள்ளனர். இந்த நிலையில், இவர்கள் செல்பி எடுக்க முயற்சித்த நேரத்தில், புதருக்கு உள்ளே மறைந்திருந்த வன விலங்கு இவர்களை தாக்க வந்துள்ளது. இதனையடுத்து பதற்றமடைந்த இருவரும் உயிரை காப்பாற்றிக்கொள்ள வெவ்வேறு திசைகளில் ஓடியுள்ளனர். 

இதனையடுத்து சுமார் பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் அஜேஷ், இவர்கள் புறப்பட்டு வந்த மலைப்பகுதிக்கு வந்துவிடவே, சுமேஷ் 5 கிமீ தூரம் உள்ளே சென்றதன் காரணமாக அலைபேசியில் சிக்னல் கிடைக்கவில்லை. மேலும், வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு பயந்து மரத்தின் மீது ஏறி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து இது தொடர்பான தகவல் வனத்துறையினருக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து, பொதுமக்களின் உதவியுடன் சுமேஷை தீவிரமாக தேடி வந்துள்ளனர். நள்ளிரவு வரை தேடியும் பலனில்லாமல் இருந்த நிலையில், நேற்று காலை மீண்டும் இப்பகுதியை சார்ந்த மக்கள் வனப்பகுதிக்கு சென்று தேடுதலில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் மயக்க நிலையில் இருந்த சுமேஷை மீது தென்மலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரை மீட்பதற்கு உதவி செய்த நபர்களுக்கு காவல் துறையினர் மற்றும் சுமேஷின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.  

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in tenkasi kottayam forest youngster rescued safely


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->