இந்தியாவின் முதல் பல்நோக்கு செயற்கை கோள்: நான்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள இன்-ஸ்பேஸ்..! - Seithipunal
Seithipunal


இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம், (இன்-ஸ்பேஸ்) இந்தியாவில் முதல்முறையாக பல்நோக்கு செயற்கைக்கோள்களை உருவாக்கி ஏவுவதற்கு, தனியார் விண்வெளி நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ரூ.1200 கோடி முதலீட்டில், பிக்சல்ஸ்பேஸ், பியர்சைட் ஸ்பேஸ், சாட்சூர் அனலிட்டிக்ஸ் இந்தியா மற்றும் த்ருவா ஸ்பேஸ் ஆகிய நான்கு தனியார் நிறுவனங்கள் அடங்கிய குழு  அடுத்த 05 ஆண்டுகளில், பூமியை பற்றிய கண்காணிக்கும் 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவுள்ளன. இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற 20 நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில் குறித்த 04 நிறுவனங்கள் தேர்வாகியுள்ளன.

பெங்களூருவைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான பிக்சல்ஸ்பேஸ் தலைமையிலான இந்திய கூட்டமைப்பு, இப்போது நாட்டின் முதல் முழுமையாக உள்நாட்டில் வணிக பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் தொடரை வடிவமைத்து, உருவாக்கி, இயக்கும். இது தொடர்பாக இன்-ஸ்பேஸ் நிறுவன தலைவர் பவன் கோயங்கா கூறியுள்ளதாவது:

இந்தியாவின் தனியார் விண்வெளி முயற்சிகள் இப்போது முதிர்ச்சி அடைந்து வருகின்றன. காலநிலை மாற்ற கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை, விவசாயம், உள்கட்டமைப்பு, கடல் கண்காணிப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றுக்கான அம்சங்களை இந்த செயற்கைக்கோள்கள் கொண்டிருக்கும் என்றும், அதே நேரத்தில் உலகளாவிய தேவையையும் பூர்த்தி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், உயர் தெளிவுத்திறன் கொண்ட இந்த பணி, உள் நாட்டு செயற்கைக்கோள் தரவை உருவாக்கும் எனவும், இது வெளிநாட்டு ஆதாரங்களை இந்தியா நம்பியிருப்பதை கணிசமாகக் குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த முயற்சி விண்வெளித் துறை சீர்திருத்தங்கள் மற்றும் இந்திய தொழில்துறை விண்வெளி பொருளாதாரத்தில், சர்வதேச அளவில் ஒரு முக்கியமான நாடாக வெளிப்படுவதற்கான இந்திய அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்று  இன்-ஸ்பேஸ் நிறுவன தலைவர் பவன் கோயங்கா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In Space approves four private companies to build Indias first multi purpose satellite


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->