நான் கற்பழிப்பிற்கு ஆளானேன்.. இன்னொருவருக்கு துரோகம் செய்ய மனமில்லை.. இளம்பெண் தற்கொலையில் பகீர்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரியாங்குப்பம் சுப்பையா நகர் பகுதியை சார்ந்தவர் மண்ணாங்கட்டி. இவருக்கு நான்கு மகள்கள் மற்றும் 3 மகன்கள் உள்ள நிலையில்., இவர்கள் அனைவரும் வாடகை இல்லத்தில் வசித்து வந்துள்ளனர். 

இவர்களின் கடைசி மகளான தனலட்சுமி (வயது 31)., புதுச்சேரியில் இருக்கும் சின்னக்கடை காந்தி வீதியில் இருக்கும் ஸ்டுடியோவில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில்., இருக்கு திருமண ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில்., நேற்று திடீரென மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

உடலில் தீப்பற்றி எரிந்து தீயின் வீரியம் தாங்க இயலாது கதறித்துடித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து., தனலட்சுமியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில்., தீவிர சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பரிதாபமாக உயிரிழந்தார். 

sexual harassment, sexual abuse, sexual torture, rapped,

இதனைத்தொடர்ந்து இவர் சிகிச்சை பெற்று வரும் நேரத்திலேயே நீதிபதி சிவகுமாரிடம் வாக்குமூலம் அளித்த நிலையில்., இது தொடர்பாக தனலட்சுமி "நான் பணியாற்றி வந்த ஸ்டுடியோவை வம்பாகீரப்பாளையம் பகுதியை சார்ந்த மதுர (வயது 37) என்பவர் நடத்தி வந்துள்ளார். 

மேலும்., ஜனவரி மாதத்தின் போது காம கொடூரன் உணவில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த நிலையில்., தற்போது தற்கொலை முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மதுரவுக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகள் உள்ள நிலையில்., அவரின் குடும்பம் பாழாகிவிடும் என்ற எண்ணத்தால் நான் புகார் அளிக்கவில்லை என்பதால்., புகார் அளிக்காமல் இருந்து வந்த நிலையில்., கற்பழிப்பிற்கு ஆளான என்னால் இன்னொருவருக்கு துரோகம் இளைக்க மனம்வரவில்லை. இதனால் என் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in puthuchery sexual harassment girl attempt suicide


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal