இல்லத்தரசிகளுக்கான இழப்பீடு; ஊதியமில்லா வீட்டுப் பணியின் மதிப்பு மாதம் 30,000 ரூபாவாக நிர்ணயம்; உச்சநீதிமன்றம் உத்தரவு..!
Court orders that the value of unpaid domestic work performed by housewives be fixed at 30000 per month
சாலை விபத்துகளில் உயிரிழக்கும் இல்லத்தரசிகளுக்கான இழப்பீட்டைக் கணக்கிடும் போது, அவர்களது ஊதியமில்லா வீட்டுப் பணியின் மதிப்பை மாதம் 30,000 ரூபாயாக நிர்ணயிக்க வேண்டும் என்ற புதிய அளவுகோலை வகுத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இல்லத்தரசிகளின் பணிகளுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்றாலும் அவர்களே 'தேசத்தை கட்டமைப்பவர்கள்' என்று நீதிபதிகள் சஞ்சய் கரோல், கோடீஸ்வர சிங் அமர்வு புகழாரம் சூட்டியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தப் புதிய தீர்ப்பின் மூலம் நாடு முழுவதும் உயிரிழந்தோருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, கடந்த 2001-இல் பஞ்சாப் மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த ரேஷ்மா என்ற பெண்ணுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு 2024 வரை நீடித்ததற்குத் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
அத்துடன், இதுபோன்ற விபத்து இழப்பீடு வழக்குகளைப் பொதுவாக ஓராண்டிற்குள் முடித்து வைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Court orders that the value of unpaid domestic work performed by housewives be fixed at 30000 per month