2,252 கோடி ரூபாய் செலவில் உலகின் முதலாவது நீருக்கடியில் இயங்கும் தரவு மையத்தை உருவாக்கியுள்ள சீனா..! - Seithipunal
Seithipunal


உலகின் முதலாவது நீருக்கடியிலான தரவு மையத்தை சீனா அமைத்துள்ளது. சீனாவின் ஷாங்காய் (Shanghai) நகரில், 'ஹைக்ளவுட்' (HiCloud) நிறுவனம், லின்-காங் (Lin-gang) கடலோரப் படுகையில் 10 மீட்டர் ஆழத்தில் இந்த மையத்தை அமைத்துள்ளது.

இது 50க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் 95 விழுக்காடு மின்சாரத் தேவையைப் பெறுகிறது. சுமார் 24 மெகாவாட் (Megawatt) திறனில் 2,000 சர்வர்களுடன் (Servers) செயல்படும் இந்த தரவு மையம் கடல்நீரைக் குளிர்விப்பானாகப் பயன்படுத்துவதால் மின் நுகர்வை 23 விழுக்காடு குறைக்கிறது. 

அத்துடன், நன்னீர் பயன்பாட்டைத் தவிர்த்து, நிலப்பரப்புத் தேவையை 90 விழுக்காடு மிச்சப்படுத்துகிறது. இதனை சீனாவின் ஏஐ (AI) தேவைகளுக்காகச் சீனா டெலிகாம் (Telecom) இதன் ஜிபியு கிளஸ்டர்களை (GPU clusters) நிறுவியுள்ளது. 

இவை இந்திய மதிப்பில் 2,252 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள திட்டமாகும். இந்த திட்டம் கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 2030க்குள் 500 கிகாவாட் (Giga Watt) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்கை நோக்கி நகரும் இந்தியா, தன்னுடைய கிழக்குக் கடற்கரையில் கடல்சார் காற்றாலைகளையும் தரவு மையக் குளிர்விப்பையும் ஒன்றிணைக்க சீனாவின் இந்தத் திட்டத்தை வழிகாட்டியாகக் கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

China has built the world's first underwater data center at a cost of 2252 crore


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->