மனைவி அழகாக இருந்தும் தீராத பேராசை.. அடித்தே கொலை செய்த கொடூர கணவன்... அரங்கேறிய பெரும் சோகம்.!! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விக்ரோலி பகுதியை சார்ந்தவர் ரொனால்ட் (வயது 33). இவரது மனைவியின் பெயர் இமா ஜோசப். இவர்கள் இருவருக்கும் திருமணம் கடந்த 2017 ஆம் வருடத்தில் நடைபெற்ற நிலையில், இவர்களின் இல்லற வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. 

மேலும், ரொனால்ட் தனது மனைவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சம்பவத்தன்றும் வழக்கம் போல கூடுதல் வரதட்சணை பிரச்சனை எழுந்துள்ளது. 

dowry, வரதட்சணை, வரதட்சணை கொடுமை,

இதனால் கணவன் - மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடைபெற்றுள்ளது. இமா ஜோசப் இறுதி முடிவாக பணம் வாங்கிவர இயலாது என்று தெரிவிக்கவே, இதனால் ரொனால்டிற்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மனைவியை ரொனால்ட் சரமாரியாக அடித்து உதைக்கவே, படுகாயமடைந்த ஜோசப் வலியை தாங்க இயலாது மயக்கமடைந்துள்ளார். இவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மயக்க நிலையில் இருந்த இமா ஜோசப்பை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

police, police investigation, investigation,

மருத்துவமனையில் இமா ஜோசப்பிற்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

தகவலை அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு, வழக்குப்பதிவு செய்து ரொனால்டை கைது செய்து சிறையில் அடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Mumbai girl murder by husband due to dowry problem


கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
கருத்துக் கணிப்பு

தமிழக அரசின் சாதி வாரி கணக்கெடுப்பு அறிவிப்பு.
Seithipunal