குடிச்சிட்டு வந்தால் ஊருக்கே ஆட்டுக்கறி விருந்து..! அசத்தும் கிராம சட்டம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள பனஸ்கந்தா மாவட்டத்திலிருக்கும் அமிர்காத் தாலுகா பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் காதிசிதாரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருக்கும் பல நபர்கள் மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். 

இதன் காரணமாக அங்குள்ள இரு தரப்பினரிடையே மோதல்களும் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாது மதுபோதையில் சில நேரங்களில் கொடூரக் கொலைகளும் அரங்கேறியுள்ளது. 

இந்த குற்ற சம்பவங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வந்ததை அடுத்து., மதுவின் காரணமாகவே இந்த குற்ற சம்பவங்கள் நடப்பதை அந்த ஊர் பெரியவர்கள் கண்டறிந்துள்ளனர். 

இதனை அடுத்து கடந்த 2013 ஆம் வருடத்தில் ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மது அருந்திவிட்டு கிராமத்திற்குள் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

drinking is injurious to health,

அவ்வாறு மதுபோதையில் ஊருக்குள் வரும் பட்சத்தில் ரூ.2 ஆயிரம் முதலில் அபராதமாக விதிக்கப்பட்டது. இதனைப் போன்று மதுபோதையில் மோதல் போன்ற பிரச்சனைகளில் ஈடுபட்டாலும் அல்லது ஏற்படுத்தினாலும் அவரிடமும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து உச்சகட்ட தண்டனையாக மதுபோதையில் வருபவர்கள் யாராக இருந்தாலும் இன்னொரு 600 பேர் வசித்து வரும் கிராமத்திற்கே ஆட்டு கறி விருந்து வைக்க வேண்டும் என்றும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும்., ஆட்டு கறி விருந்துக்கு சுமார் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும் என்ற நிலையில்., இதற்கு பயந்து யாரும் மது அருந்தாமல் இருந்து வந்துள்ளனர். தற்போது இந்த கிராமத்தில் யாருமே மதுபானம் அருந்துவது இல்லை. எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. துவக்கத்தில் மூன்று முதல் நான்கு பேர் பிடிபட்டாலும் தற்போது வருடத்திற்கு ஒருவர் மட்டுமே இவ்வாறு செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

in Gujarat village peoples could not drink for drinking fine


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->