2 மணி 20 நிமிடத்தில் ஹைதராபாத்: புல்லெட் ரெயிலால் தமிழக பயணத்தில் வரப்போகும் அதிரடி மாற்றம்...! - Seithipunal
Seithipunal


உலகின் முன்னேற்ற நாடுகள் பெரும்பாலும் அதிவேக புல்லெட் ரெயில் சேவையைக் கொண்டு தங்கள் போக்குவரத்து திறனை உயர்த்தியுள்ளன. ஜப்பான், சீனா, தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் இத்துறையில் முன்னணியில் திகழ்கின்றன.

இந்தப் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறும் வகையில், மும்பை – அகமதாபாத் இடையிலான நாட்டின் முதல் புல்லெட் ரெயில் திட்டம் வேகமாக செயல்படுத்தப்படுகிறது.

2027-ல் சூரத் – வாபி பிரிவு இயக்கத்துக்கு வரவுள்ளது; 2029 ஆம் ஆண்டில் முழு வழித்தடமும் பயணிகளுக்கு திறக்கப்படும் என தேசிய ரெயில்வே வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.இதே சமயம், தென்னிந்தியாவிலும் இரண்டு முக்கிய புல்லெட் ரெயில் பாதைகள் குறித்து ஆய்வு துவங்கியுள்ளது.

சென்னை – பெங்களூரு – மைசூரு பாதைக்கு நிலம் அளவீடு நடைபெற்று வருகிறது.சென்னை – ஹைதராபாத் புல்லெட் ரெயில் திட்டத்திற்கான 778 கிலோமீட்டர் நீளமான தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைக்கு தென் மத்திய ரெயில்வே முதற்கட்ட அறிக்கையைத் தயாரித்திருந்தது.

இதற்கிடையில், இந்த ரெயில் நேரடியாக திருப்பதி வழியாக செல்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, பாதைத் திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டது. இறுதி விரிவான திட்ட அறிக்கையும் மாநில அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்தவுடன் நிலம் கையகப்படுத்தும் பணிகளும் துவங்கும் வாய்ப்பு அதிகம்.தற்போது, தமிழக அரசின் ஆலோசகர் நிறுவனமான ரிட்ஸ், இந்தத் திட்டத்துக்குத் தேவையான 223.44 ஹெக்டேர் நில விவரங்களை அறிக்கையாக சமர்ப்பித்துள்ளது.

65 சாலைகளும், 21 உயர் மின்னழுத்த மின் கோடுகளும் கடந்து செல்ல வேண்டியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல் மற்றும் மீஞ்சூர் அருகிலுள்ள சென்னை வெளிவட்ட சாலை வயலில் தலா 50 ஏக்கர் பரப்பளவில் இரண்டு புல்லெட் ரெயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முன்னேறினால், தற்போது 12 மணி நேரம் எடுக்கும் சென்னை – ஹைதராபாத் பயணம் வெறும் 2 மணி 20 நிமிடமாக குறையப்போகிறது—தமிழகத்திற்கும் தெலுங்கானாவிற்கும் இடையிலான அதிவேக இணைப்புக்கு இது புதிய அத்தியாயமாக அமையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hyderabad in 2 hours and 20 minutes dramatic change Tamil Nadu travel bullet train


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->