கிழிந்த ரூபாய் நோட்டுகளை இனி ஈஸியாக மாற்றி கொள்ளலாம்.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஏடிஎம் மிஷினில் பணம் எடுக்கும்போது பலருக்கு கிழிந்த ரூபாய் நோட்டு வந்திருக்கும். மிஷினில் சிக்கிக் இருந்திருக்கலாம். அவ்வாறு கிழிந்த நோட்டு உங்களிடம் இருந்தால் என்ன செய்யலாம். வாங்க பார்க்கலாம்.

ஏடிஎம்களில் கிழிந்த நோட்டுகளை வந்தால் கூட பரவாயில்லை பெரும்பாலான இடங்களில் நாம் சில்லறை மாற்றும் போது நமக்கே தெரியாமல் கிழிந்த ரூபாய் நோட்டுகள் நம்மிடம் வந்து சேரும். இதுபோன்ற கிழிந்த பழைய நோட்டுகள் உங்களிடம் இருந்தால் இனி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

வங்கிகளில் கிழிந்த ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு வேறு நோட்டுகளை மாற்றி வருகின்றனர். ஆனால் நிறைய பேருக்கு இந்த தகவல் தெரியவில்லை. ஏடிஎம் மையங்களில் இதுபோன்ற இந்த நோட்டுக்கள் வந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று நீங்கள் எழுதி தரவேண்டும். மேலும் பணம் எடுத்த தேதி மற்றும் நேரம் ஆகிய விவரங்களை குறிப்பிட வேண்டும். படம் எடுத்ததற்கான ரசீது மற்றும் எஸ்எம்எஸ் போன்ற விவரங்களையும் காண்பிக்க வேண்டும்.

ஏடிஎம்களில் எடுக்காமல் உங்களிடம் வேறு வழியில் கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்திருந்தாலும் அதை நீங்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி ரூபாய் நோட்டுகள் பிரிந்திருக்கும் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட மதிப்பில் வேறு நோட்டுகள் உங்களுக்கு வழங்கப்படும். மேலும் அதே ரூபாய் நோட்டு மதிப்பிற்கு பெரும்பாலும் கிடைக்காது. மிகவும் மோசமாக இருந்திருக்கும் நோட்டுகளை நீங்கள் ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் மாற்றிக் கொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to change tear rupees


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->