நள்ளிரவில் நடந்த பயங்கரம்...! ஒரே வீட்டில் 3 சடலங்கள்...! ஆழமான தூக்கத்தால் உயிர் பிழைத்த மருமகள்! பின்னணி என்ன...? - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் மண்டியா நகரின் நேருநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகர். அப்பகுதியில் துணி வணிகம் செய்து வந்த அவர், தனது மனைவி ஜோதி மற்றும் மகன் சந்தோஷுடன் வசித்து வந்தார். சமீபத்தில் திருமணம் முடித்திருந்த சந்தோஷ், தனது மனைவியுடன் பெற்றோரோடு ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல் விழித்தெழுந்த சந்தோஷின் மனைவி, கணவர் வீட்டில் இல்லாததை கண்டு அவர் கடைக்கு சென்றிருக்கலாம் என எண்ணி அன்றாட பணிகளில் ஈடுபட்டார்.ஆனால் நீண்ட நேரமாகியும் மாமியார் ஜோதி அறையில் இருந்து வெளியே வராததால், அவரை அழைக்க அறைக்குச் சென்றார்.

அங்கு காத்திருந்த காட்சி அவரை அதிர்ச்சியின் உச்சிக்கே கொண்டு சென்றது. ஜோதியும், சந்தோஷும் படுக்கையில் உயிரற்ற நிலையில் கிடந்தனர். பிரபாகர் மட்டும் அங்கு இல்லாதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டு கதறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பார்த்தனர்.

இதற்கிடையில், அருகிலிருந்த துணிக்கடையில் பிரபாகர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், அதிகாலை நேரத்தில் பிரபாகர் தனது மனைவி ஜோதியின் கழுத்தை நெரித்ததாகவும், சத்தம் கேட்டு வந்த மகன் சந்தோஷையும் தாக்கி உயிரிழக்கச் செய்ததாகவும் தெரியவந்தது.

அதன் பின்னர் துணிக்கடைக்கு சென்ற பிரபாகர் அங்கு தூக்கிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொண்டதாக விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இந்த துயர சம்பவம் அரங்கேறிய நேரத்தில், புதுமணப் பெண் வீட்டின் மற்றொரு அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் எதுவும் அறியாமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாக அவர் உயிர் தப்பியிருப்பதும் தெரியவந்துள்ளது.இதற்கிடையில், இந்த கொடூர முடிவின் பின்னணி என்ன என்பது குறித்து காவலர்கள் தீவிரமாக ஆராய்ந்தனர். அப்போது பிரபாகர் தனது கைப்பட எழுதியிருந்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது.அந்த கடிதத்தில், துணி வணிகத்தில் ஏற்பட்ட கடும் நஷ்டம், அதிகரித்து வந்த கடன் சுமை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் நெருக்கடி காரணமாக கடுமையான மனவேதனைக்கு ஆளானதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியாத நிலையில் மனைவி மற்றும் மகனை உயிரிழக்கச் செய்த பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாகவும் எழுதியிருந்தார்.இந்த தகவல்களின் அடிப்படையில், கடன் சுமை மற்றும் மனஅழுத்தமே இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவலர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் பல்வேறு கோணங்களில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்த இந்த துயரச் சம்பவம் மண்டியா பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு விசாரணை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

horror that happened middle night 3 bodies one house daughter in law who survived through deep sleep What background


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->