கேரளாவில் கொடூரம்…16 வயது சிறுமி கர்ப்பம்… பாலியல் வன்கொடுமை குற்றவாளி மகாராஷ்டிராவில் கைது...!
horrific incident Kerala 16year old girl pregnant harassement culprit arrested Maharashtra
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் பந்திரங்காவு பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று சமூகத்தையே பதறவைத்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சுஹைல், தனது குடும்பத்தினரைச் சந்திக்க அப்பகுதிக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வசிக்கும் 16 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.
சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்த சுஹைல், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மனஅழுத்தம் மற்றும் பயம் காரணமாக, அந்த சிறுமி இந்த கொடூரத்தை உடனடியாக யாரிடமும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார்.

ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அவர் கர்ப்பமானது தெரியவந்ததும், சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கிடையில் குற்றவாளி சுஹைல் கேரளாவிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். பாதிக்கப்பட்ட சிறுமி பந்திரங்காவு போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
தன்னை கண்டுபிடிக்க முடியாதபடி செல்போன், சிம் கார்டு உள்ளிட்ட அனைத்தையும் கைவிட்டு தப்பியதால், சுஹைலின் இருப்பிடத்தை கண்டறிவது போலீசாருக்கு சவாலாக மாறியது. எனினும், அவரது உறவினர்களை தொடர்ந்து கண்காணித்து விசாரித்த போலீசாருக்கு, அவர் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் பந்தர்பூரில் ஒளிந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து உதவி கமிஷனர் பரோக் தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு சென்று, மகாராஷ்டிரா போலீசின் உதவியுடன் குடிசைப்பகுதியில் பதுங்கியிருந்த சுஹைலை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் அவரை கேரளாவுக்கு அழைத்து வந்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம், சிறார்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடும் கவலைகளை எழுப்பியுள்ளது.
English Summary
horrific incident Kerala 16year old girl pregnant harassement culprit arrested Maharashtra