மிர்சாகுடா கேட் அருகே கோர விபத்து...! - அதிகாலை நேரத்தில் 4 இளைஞர்கள் பலி - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநிலம் மிர்சாகுடா கேட் பகுதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில், நான்கு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

இந்த துயர சம்பவத்தில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும், உயிரிழந்தவர்கள் கர்கயாலா சுமித், நிகில், பால்முரி ரோகித் மற்றும் தேவலா சூர்ய தேஜா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விபத்தில் மேலும் சுங்கரி நட்சத்திரா என்பவர் படுகாயம் அடைந்து, உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாகனத்தின் வேகம், சாலை நிலை மற்றும் பிற காரணங்களை ஆராய்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

horrific accident near Mirzaguda Gate Four young men killed early morning hours


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->