இந்து அமைப்பு நிர்வாகி வெட்டிக்கொலை.. 144 தடை உத்தரவு அமல்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் சிமோகா நகர் சி.கே. கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா. இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பு நிர்வாகி ஆவார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் தொட்ட பேட்டை அருகே உள்ள பாரதி காலனி ரவிவர்மா வீதியில் இருசக்கர வாகனத்தில் ஹர்ஷாசென்று கொண்டிருந்த போது அவரை, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து. அவர்களிடமிருந்து தப்பிக்க ஹர்ஷா முயன்றனர். ஆனால், மர்ம நபர்கள் தங்கள் வைத்திருந்த பயங்கரமான ஆயுதங்களால் ஹர்ஷாவை சரமாரியாக தாக்கி படுகொலை செய்தனர். 

அதன் பிறகு அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காவல்துறையினர் ஹர்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்து அமைப்பு நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதனிடையே இரு தரப்பினர் அங்கு குவிந்துள்ளனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் நிலை உண்டானது. இதனால், காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் கொலை செய்தவர்கள் யார்.? எதற்காக கொலை செய்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மேலும், சிமோகா நகரில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் காவல்துறை குவிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hindu organization member murder


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் தேமுதிக புறக்கணித்துள்ளதற்கு காரணம்?
Seithipunal
--> -->