பீகாரின் புதிய என்.டி.ஏ. அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு; சாம்ராட் - தேஜஸ்வி இடையே கடும் விவாதம்..! - Seithipunal
Seithipunal


பிகாரில் முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார் ராஜினாமா செய்ததையடுத்து, பாஜக தலைமையில் அமைச்சரவை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

பிகாரின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்ற சாம்ராட் சவுத்ரி சட்டப்பேரவையில் நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன்படி, 90 நிமிடங்கள் நடந்த விவாதத்திற்கு பிறகு, குரல் வாக்கெடுப்பில் சாம்ராட் சவுத்ரி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் பிரேம் குமார் அறிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசுக்கு ஸ்திரத்தன்மை வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிகார் மாநிலம் 05 ஆண்டுகளில் ஐந்தாவது அரசை காண்பதாக தெரிவித்துள்ளார். விஜய் சின்ஹாவிடமிருந்து, முதலமைச்சர் தனது 'தலைப்பாகையை' பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் விமர்சித்துள்ளார்.

அத்துடன், மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுக்க ஒரு அரசாங்கத்திற்கு ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம் எனவும், பீகார் ஒரு தனித்துவமான மாநிலம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இங்கு ஐந்தாவது முறையாக ஒரு அரசு அமைந்திருக்கிறது. ஒரு 'தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்' நிலையிலிருந்து, ஒரு 'நியமிக்கப்பட்ட முதலமைச்சர்' நிலைக்கு ஏற்பட்ட இந்த மாற்றத்திற்காக, சாம்ராட் சௌத்ரிக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவையில் பேசிய தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், லல்லு பிரசாத் யாதவின் 'பள்ளியில்' பயின்று தேர்ச்சி பெற்ற ஒருவராக அவர் திகழ்வது கண்டு நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்றும், அவரே முதலமைச்சராகப் பொறுப்பேற்பதை விட, எங்களுக்குச் சிறந்த விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அவருக்கு பதிலளித்த முதலமைச்சர் சாம்ராட் சௌத்ரி, ''தன் சகோதரியையே மதிக்காதவர்கள் மற்றவர்களைப் பற்றி கருத்து சொல்லக்கூடாது. நீங்கள் என் மீது தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தினால், என்னிடமிருந்தும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்” என பதில் கொடுத்துள்ளார்.  ஜேடியு சட்டமன்றக் கட்சித் தலைவர் ஸ்ரவன் குமார், சாம்ராட் சவுத்ரி அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Heated Debate Between Samrat and Tejashwi During Trust Vote for Bihars New NDA Government


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?


செய்திகள்



Seithipunal
--> -->