மகனுக்கு ஆண்மை குறைபாடு! குழந்தைக்காக மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த மாமனார்! பெரும் அதிர்ச்சி சம்பவம்! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயது பெண், 2024 பிப்ரவரியில் திருமணம் செய்துகொண்டார். வயதைக் கருத்தில் கொண்டு கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகள் குறைந்திருக்கலாம் எனக் கருதி, அந்த தம்பதி மருத்துவரை அணுகினர்.

பரிசோதனையில், கணவரின் விந்தணு எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால் இயற்கையான முறையில் கருத்தரிக்க முடியாது என்றும், செயற்கை முறையை பரிசீலிக்கலாம் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால் பெண்ணுக்கு செயற்கை முறையில் கர்ப்பம் தரிக்க விருப்பமில்லாததால், குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். இதற்கு குடும்பம் மறுப்பு தெரிவித்தது.

இதற்கிடையில், 2024 ஜூலையில், மாமனார் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த விஷயத்தை கணவரிடம் கூறியபோது, குழந்தை வேண்டும் என வலியுறுத்திய கணவர், அதை வெளியிடக்கூடாது என்றும், இல்லையெனில் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவேன் என மிரட்டினார்.

பின்னர் மாமனார் பலமுறை அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இருந்தும் கர்ப்பம் தரிக்காததால், 2024 டிசம்பரில் கணவரின் தங்கையின் கணவர், குழந்தைக்காக அவரை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்தார். தொடர்ந்து பல மாதங்கள் இது நீடித்து, 2025 ஜூனில் அவர் கர்ப்பம் தரித்தார். ஆனால் சில வாரங்களிலேயே கரு கலைந்தது.

தாங்க முடியாத மன வேதனையில், அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gujarat Woman harres in family members


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->