குஜராத் || வந்தே பாரத் ரெயிலில் கல் வீச்சு.! மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி மற்றும் அந்தக் கட்சியின் குஜராத் மாநிலத் தலைவர் சபீர் கப்லிவாலா உள்ளிட்டோர் பயணம் செய்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி மீது மர்ம நபர்கள் கல்வீசி உள்ளனர். 

இது குறித்து, அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வாரீஸ் பதான் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, ஆமதாபாத் நகரில் இருந்து சூரத் நகர் நோக்கி எங்களது கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, குஜராத் மாநிலத் தலைவர் சபீர்கப்லிவாலா மற்றும் கட்சியின் தேசிய குழுவினர் உள்பட நாங்கள் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தோம். 

அப்போது, நாங்கள் ரெயில் நிலையம் வந்தடைவதற்கு 25 கி.மீ. தொலைவு இருக்கும்பொழுதே, ரெயில் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கல் ஒன்று வீசப்பட்டது. அதில், ரெயிலின் ஜன்னல் கண்ணாடி சேதம் அடைந்தது. கல்வீசப்பட்ட அந்த பெட்டியில் ஓவைசி அமர்ந்து இருந்திருந்தார். இதைத் தொடர்ந்து, சிலர் அடுத்தடுத்து கற்களை வீசினர். 

மேலும், நீங்கள் கற்களை வீசலாம். அல்லது மழையாக துப்பாக்கி சூடு பொழியலாம். ஆனால் எங்களது உரிமைகளுக்கான குரல் ஒலிப்பது ஒருபோதும் நிற்காது என்று அவர் தெரிவித்து உள்ளார். அதன் பின்னர், குஜராத் சென்றடைந்த அவர்கள் பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டனர். 

அப்போது பதான், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதம் அடைந்த விவரம் குறித்து பேசினார். இதையடுத்து, ரெயிலின் ஜன்னல் கண்ணாடி கல்வீச்சில் சேதம் அடைந்த புகைப்படங்களையும் அவர் டுவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat vande bharat train attack window broke


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->