போலிசாமியின் காமுக பித்தலாட்டம்.. 2 பெண்களை கற்பழித்து, கர்ப்பமாக்கிய கொடூரம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் குஜராத் மாநிலத்தை சார்ந்த இளம்பெண் மற்றும் அவரது சகோதரியான சிறுமியை கற்பழித்த காமுக போலிசாமியார் மற்றும் அவனின் இரண்டு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குஜராத் மாநிலத்தில் தங்கியிருந்த விஷ்ணு நாயக் என்ற போலி சாமியார், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நந்தபார் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவரிடம் தனது குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்க கூறி, குஜராத் மாநிலத்தில் உள்ள கண்டுவி நகரை சார்ந்த 2 பெண்களின் தந்தை அணுகியுள்ளார். 

அந்த சமயத்தில், போலி சாமியார் தங்களின் இரண்டு மகள்களுக்கு பேய் பிடித்துள்ளது என்றும், அதனை சரி செய்யும் சடங்குகள் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்காக ரூ.50 ஆயிரம் பணமும் வசூல் செய்துள்ளான்.

பேயை ஓட்ட சாமியாரிடத்தில் பெண்களை விட்டுவிட்டு தந்தை செல்ல, காமுக சாமியார் பெண்களை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இவ்வாறாக 4 மாதங்களாக இருவருக்கும் பல கொடூரங்கள் அரங்கேறி வந்த நிலையில், இருவருமே கர்ப்பமாகியுள்ளனர். 

இந்த விஷயத்தை அறிந்த குடும்பத்தினர் விசாரணை செய்கையில், மேற்கூறிய பேரதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண்களின் தந்தை அளித்த புகாரின் பேரில் காமுக போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Sisters rapped by fake lord police arrest culprit


கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!Advertisement

கருத்துக் கணிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி?!
Seithipunal