முகவரி அனுப்பினால் இலவச ஆடை டோர் டெலிவரி.., பெண்களே உங்களுக்கும் மெசேஜ் வந்துள்ளதா?.. உஷார்.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் வசித்து வரும் பெண்மணியின் அலைபேசி எண்ணிற்கு, கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. இந்த குறுஞ்செய்தியில், உங்களது முகவரியை தெரிவித்தால், இலவசமாக ஆடை அனுப்புவதாக இருந்துள்ளது. 

இதனைக்கண்ட பெண்மணியும் வீட்டின் முகவரியை அனுப்பிய நிலையில், டிசம்பர் 17 ஆம் தேதி தொடர்பு கொண்ட மர்ம நபர், உங்களின் போட்டோ வேண்டும் என்று கேட்டுள்ளான். கயவனின் விபரீத பேச்சு தெரியாமல், பெண்மணியும் தனது புகைப்படத்தை வாட்சாப் வாயிலாக அனுப்பி வைத்துள்ளார். 

இதனையடுத்து, மீண்டும் பெண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர், தங்களின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப வேண்டும் என்றும், இல்லையேல் நீங்கள் அனுப்பிய போட்டோவை மாபிங் செய்து இணையத்தில் பதிவு செய்வேன் என்றும் மிரட்டியுள்ளான். 

இதனால் பயந்துபோன பெண்மணி அழைப்பை துண்டித்துவிட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் சைபர் கிரைம் காவல் துறையினரின் உதவியுடன் காமுகனை தேடி வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat girl Receive Message free dress culprit miss use photo police investigation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->