குஜராத் தேர்தல் பணி : ராணுவ வீரர்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு - இருவர் பலி.! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகளின் ஓட்டு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவ படையினர் ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். 

அவர்களில் இந்திய ரிசர்வ் பட்டாலியனை சேர்ந்த துணை ராணுவ வீரர்கள், போர்பந்தர் நகர் துக்டா கோசா பகுதியில் உள்ள புயல் நிவாரண முகாம் ஒன்றில் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்றிரவு அவர்களில் ஒருவர், சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். 

இதில், இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு போர்பந்தர் நகர மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதன்பின்பு அவர்கள் உயர் சிகிச்சைக்காக ஜாம்நகர் மருத்துவ கல்லூரிக்கு அழைத்து சென்றனர்.

அவர்கள் அனைவரும் மணிப்பூரை சேர்ந்தவர்கள். இதையடுத்து, அந்த பகுதிக்கு கூடுதல் ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு நடந்ததற்கான காரணம் பற்றி தெரிய வரவில்லை என்பதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat election indian pattaliyan soldiers gunshoot two soldiers died


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->