பறவையின் உயிரை காக்க தன்னுயிரை இழந்த இளைஞர்.. மின்சாரத்தில் அலட்சியம் கூடாது.!! - Seithipunal
Seithipunal


மின்சாரத்தில் நாம் அலட்சியமாக செயல்பட்டால், ஒரு உயிரை நாம் காப்பாற்ற நினைத்தாலும் அலட்சியம் நமது உயிரை பறித்துவிடும் என்பதே நிதர்சனம். 

குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மாவட்டம் மால்பூர் தாலுகா பகுதியை சார்ந்த இளைஞர் திலீபாய் கல்பபாய் தேவி புஜாக். இவர் சம்பவத்தன்று கடைவீதி பகுதிக்கு சென்றுள்ளார். இதன்போது, மின்சார கம்பியில் பறவை ஒன்று சிக்கியுள்ளது. 

இதனைக்கண்டு வேதனையடைந்த இளைஞர் திலீபாய், கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு பறவையை மின்சார கம்பியில் இருந்து மீட்க மின்கம்பியின் மேலே எறியுள்ளார். பறவைக்கு அருகே குச்சியை கொண்டு சென்று பறவையை அவர் வெற்றிகரமாக விடுவித்தார்.

ஆனால், அவரின் போதாத நேரம் பறவை பறந்தும், மின்சாரம் மேலே இருந்த இளைஞரின் மீது நொடிப்பொழுதில் தாக்கியது. இதனால் மின்கம்பத்தில் மேலே இருந்த இளைஞர் சுயநினைவை இழந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியாகினர். 

இவர் பறவைக்கு உதவி செய்வதை எதற்ச்சையாக ஒருவர் வீடியோ பதிவு செய்கையில், இந்த சோகமும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. அவரது குடும்பத்திற்கு குஜராத்தை சார்ந்தவர் நிதிஉதவி செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. 

மின்சார விஷயங்களை பொறுத்த வரையில் பறவைகள் மின்கம்பியில் சிக்கியிருந்தால் தீயணைப்பு படையினர் மற்றும் மின்வாரியத்துறையினருக்கு தகவலை தெரிவித்து சம்பந்தப்பட்ட பகுதியில் முதலில் மின்சாரத்தை துண்டிக்க தகவல் தெரிவிக்க வேண்டும். மின்சாரம் அப்பகுதியில் துண்டிக்கப்பட்ட பின்னரே மின்கம்பியில் ஏறி உதவி செய்ய வேண்டும்.

தூரத்தில் இருந்தால் மின்சாரம் நம்மை தாக்காது என்று எண்ணி கையளவு குச்சியை எடுத்து சென்றால், அதனால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இளைஞர் இறப்பே சாட்சி. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gujarat Aravalli Youngster Died Electric Attack


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->