மோடியால் இமாச்சல் பிரதேச தேர்தல் தேதி மட்டும் அறிவிக்க வாய்ப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட போகும் தேர்தல் ஆணையம்! - Seithipunal
Seithipunal


குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்பு!

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற பொது தேர்தல் டிசம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இரு மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக கட்சிகள் மும்முறமாக ஈடுபட்டு வருகின்றன. குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டியின் நிலவி வருகிறது.

குஜராத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிரான மனநிலையை ஆம் ஆத்மி கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் தேர்தல் பணியாற்றி வருகிறது. சீக்கியர், முஸ்லிம், கிறிஸ்தவர் என சிறுபான்மையினர் ஓட்டுகள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்களின் ஓட்டுகள் ஒட்டுமொத்தமாக ஆம் ஆர்மி கட்சி பெரும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதேபோல் இமாச்சலப் பிரதேசத்திலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த இரண்டு மாநில சட்டமன்ற பொது தேர்தல் கருதப்படுகிறது. வெற்றி பெறும் நோக்கில் பாஜகவும் அதிதீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவும் சில தினங்களுக்கு முன்பு ஒன்றாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் குஜராத் & இமாச்சல் பிரதேச தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று மாலை 3 மணிக்கு டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் இந்திய தலைமை தேர்தல் ஆணையர். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வேட்பு மனு தாக்கல் முதல் தேர்தல் முடிவு அறிவிக்கும் தேதி வரை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குஜராத் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்றுள்ளார். ஏற்கனவே அகமதாபாத்- மும்பை தானே இடையே வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்னும்  சில திட்டங்களை தொடங்கி வைக்க இருப்பதால் இன்று மாலை வெளியாகும் அறிவிப்பில் குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாக இமாச்சல் பிரதேச தேர்தல் தேதி மட்டும் இன்று அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat and Himachal Pradesh election dates to be announced


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->