குஜராத்தில் 5 பேர் தற்கொலை! காரணத்தை கேட்டு அதிர்ந்த மக்கள்!
Gujarat Ahmedabad family suicide case
குஜராத் மாநிலம், அகமதாபாத் அருகே உள்ள பகோதரா பகுதியில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு, தாமும் உயிரை மாய்த்த தம்பதியினரின் சம்பவம் பரவலான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபுல் வகேலா (32) என்ற ஆட்டோ ஓட்டுநர், கடன் சுமையில் சிக்கியதால் மனவேதனையில் இருந்ததாகத் தெரிகிறது. தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த அவர், ஆட்டோவுக்காக பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்த நிலையில், வாழ்க்கையை முடிக்க தீர்மானித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்குப் விஷம் கொடுத்து கொன்ற பிறகு, தாமும் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிகின்றனர்.
தற்போது வீட்டிற்குள் ஐந்து பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
விபுல் மட்டுமே குடும்பத்திற்காக வேலை பார்த்து வந்த நிலையில், நிதிநெருக்கடியால் இந்த கடுமையான முடிவை எடுத்து இருக்கலாம் என உறவினர்கள் கூறியுள்ளனர்.
சம்பவத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த அனைத்து கோணங்களிலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Gujarat Ahmedabad family suicide case