பெங்களூரு: செல்போனில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த காவலாளி கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆடுகோடி காவல் நிலைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் தம்பதி ஒருவர் வீட்டில் ராஜேந்திரன்(38) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டின் உரிமையாளரின் மனைவி குளியல் அறையில் குளித்துக் கொண்டிருப்பதை ராஜேந்திரன் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதைப்பார்த்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டுள்ளார்.

இதையடுத்து இவரது சத்தம் கேட்டு ஓடி வந்த கணவர், மனைவி குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த ராஜேந்திரனை மடக்கி பிடித்து இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ராஜேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Guard arrested for taking video of woman bathing on cell phone in bangalore


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->