அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியத் தடை - எங்குத் தெரியுமா?
govt employees jeans t shirt not wear in rajasthan
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜஸ்தான் தலைமை செயலர் அலுவலகத்தில் மணீஷ் அரோரா திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணி செய்யும் ஊழியர்கள் டி-சர்ட் போன்ற ஆடைகளை அணிந்திருந்தனர்.

இதைப்பார்த்த அவர், பணியின் போது ஊழியர்கள் கண்ணியமான ஆடைகளை அணிய வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “பணியின் போது ஜீன்ஸ், டி-சர்ட் போன்ற அநாகரிக ஆடைகள் அணிவது, அலுவலகத்தின் கண்ணியத்திற்கு எதிராக உள்ளது.
ஆகவே ஊழியர்கள் சாதாரண உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டும். ஆண்கள் பேண்ட் சட்டை, பெண்கள் புடவை அல்லது சுடிதார் போன்ற உடையில் வரலாம். ஊழியர்கள் இதனை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
English Summary
govt employees jeans t shirt not wear in rajasthan