புதுச்சேரி சிறுமி படுகொலை - ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடிவந்தனர். இந்த நிலையில், அந்த சிறுமியின் உடல் அம்பேத்கர்நகர் வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் கண்டெடுக்கப்பட்டது. 

இதையடுத்து போலீசார் சிறுமியை கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலிசார் இருவரை கைது செய்த நிலையில் சிலரை தேடி வருகின்றனர். இதற்கிடையே, சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வெளியிட்டுள்ள பதிவில், ”இது போன்று நடப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மக்களின் போராட்டம் நியாயமானதுதான். ” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

governor thamizhisai soundarrajan condems puthuchery girl murder


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->