தங்க ஆபரண பிரியர்கள் மகிழ்ச்சி; விலை சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது..! - Seithipunal
Seithipunal


கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களில் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் நகை பிரியர்கள், வியாபாரிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். தற்போது ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் விலை அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்தது. ஆனால், ஈரான் - அமெரிக்கா போர் தொடங்கிய பின்னர்கூட தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.

அதன்படி, இன்று தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டு, 5%க்கும் மேல் குறைந்து, 2026-ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. அதாவது, இந்த உலோகம் கடந்த நான்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக இல்லாத மிகக் கடுமையான வாராந்திர இழப்பைச் சந்தித்தது. 

இதனை புரியும் படி சொன்னால், வட்டி தரும் சொத்துக்கள் கவர்ச்சிகரமாகத் தோன்றும் போது, ​​தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைய முனைகின்றன. அத்துடன், ஒரு பெரிய அளவிலான பரந்த மாற்றமும் நிகழ்ந்து வருகிறது, இதில் வலுவான டாலரும் இறுக்கமான பணப்புழக்கமும் விலையுயர்ந்த உலோகங்கள் உட்பட பல சொத்து வகைகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

அந்த வகையில், சென்னையில் தங்க ஆபரணத்தின் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்துள்ளது. இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,360 அதிரடியாக குறைந்து, ஒரு சவரன் ரூ.1,03,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது, கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

அதேபோன்று, இன்று பிற்பகல் வர்த்தகம் நிறைவடையும் தருவாயில், தங்கம் விலை மேலும் குறைந்தது. அதன்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,240 குறைந்து ஒரு சவரன் 1,01,360க்கும் கிராமுக்கு ரூ.280 குறைந்து ஒரு குறைந்து ஒரு கிராம் ரூ.12,670க்கும் விற்பனையானது. 

அத்துடன், வெள்ளியின் விலை இன்று காலையில் கிராமுக்கு ரூ.15-ம், கிலோவுக்கு ரூ.15 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. 

ஈரான் போர் காரணமாக அதிகரித்து வரும் பணவீக்கக் கவலைகள் மற்றும் கச்சா எண்ணெய் விலைகளின் உயர்வு ஆகியவை உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவே, இந்தத் தீவிர வீழ்ச்சிக்கு காரணமாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த நிறுவன முதலீட்டாளர்கள், தங்கள் சொத்துகளைக் கட்டாயமாக விற்றுப் பணமாக்குவதாலும், பணத்தைத் திரட்டுவதாலும் இந்த விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், நிச்சயமற்ற தன்மை அதிகரிக்கும் காலங்களில், முதலீட்டாளர்கள் தங்கம் போன்ற எளிதில் பணமாக்கக்கூடிய சொத்துக்களைப் பாதுகாப்பான புகலிடங்களாக வைத்திருப்பதற்குப் பதிலாக, பணத்தைத் திரட்டுவதற்காக அவற்றை விற்பனை செய்வது வழக்கம். 

ஆகையால், குறுகிய காலத்தில், விலைகள் மிகவும் நிலையற்றதாக இருப்பதால் அவற்றை வாங்கிச் சேமிப்பதில் கூடுதல் கவனமும் தேவை என வல்லுநர்கள்  எச்சரிக்கின்றனறனர். அதேநேரத்தில், ஒரு பாதுகாப்பு அரணாகவும், அவற்றின் பங்கு அப்படியே நீடிக்கும் எனவும் வல்லுநர்கள் மேலும், அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold prices have dropped twice in a single day


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->