காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் வீட்டில் நுழைந்து மாணவன் செய்த செயல்.! - Seithipunal
Seithipunal


மும்பையில் ஒரு 19 வயது வாலிபர் காதலிக்க மறுப்பு தெரிவித்த இளம் பெண்னின் வீட்டிற்குள் நுழைந்து அவரை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையின் வசாய் பகுதியில் இருக்கின்ற ஒரு கல்லூரியில் அமன் மாதேஷியா என்ற இளைஞரும் பூஜா படேல் என்ற இளம்பெண்ணும் படித்து வந்துள்ளனர். பூஜா படேலை காதலிப்பதாகச் சொல்லி கடந்த சில மாதங்களாகவே அமன் மாதேஷியா,  தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பூஜாவுக்கு, மாதேஷியா செல்போன் மூலம் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

அவரது எண்ணை பிளாக் செய்தாலும் மீண்டும் மீண்டும் வேறு வேறு எங்கள் இருந்து அந்த பெண்ணுக்கு கால் செய்து நச்சரித்துக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் தொல்லை தாங்க முடியாத நிலையில் பூஜா தனது பெற்றோரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்கள் மாதேஷியாவை கண்டித்துள்ளனர். 

இத்தகைய நிலையில், கடந்த திங்கட்கிழமை, மதியம் பூஜா படேலின் வீட்டிற்குள் நுழைந்த மாதேஷியா பூஜாவை சரமாரியாக தாக்கியபிறகு குளியலறைக்கு இழுத்துச் சென்று தான் வைத்திருந்த துணியால் கழுத்தை நெரித்து இருக்கின்றார். இதில், பூஜா மயங்கியுள்ளார். இதையடுத்து கதவை பூட்டிவிட்டு பூஜாவின் செல்போனை பிடுங்கி கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

சற்று நேரத்தில் நினைவு திரும்பிய பூஜா சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பெற்றோர் விரைந்து வந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதுபற்றி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாதேஷியாவை கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl didn't accept love boy attack in Mumbai


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->