ஆந்திராவில் பரபரப்பு : ஆள்துளைக் கிணற்றில் இருந்து வெளியான எரிவாயு..!! அச்சத்தில் மக்கள்..! - Seithipunal
Seithipunal


 ஆந்திராவில் உள்ளது சிந்தாலப்பள்ளி என்ற கிராமம். இது ஆந்திராவின் அல்லூரி சீதா ராம ராஜூ என்ற மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள சிந்தாலப்பள்ளி கிராமத்தில் தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து எரிவாயு வெளியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

இந்த சிந்தாலப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாயி ஒருவரின் நிலத்தில், ஒரு ஆள்துளைக் கிணறு உள்ளது. இந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து தான் எரிவாயு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 15 மீ உயரத்திற்கு எழுந்து எரிவாயு அந்த விளைநில பகுதி முழுவதும் பீய்ச்சி அடித்துள்ளது.

எப்போதும் தண்ணீர் மட்டுமே வரும் அந்த ஆள்துளைக் கிணற்றில் முதல் முறையாக இப்போது எரிவாயு வந்துள்ளதால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ONGC அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதையடுத்து சம்பவம் நடந்த சிந்தாலப்பள்ளி கிராமத்திற்கு உடனடியாக விரைந்து வந்த ONGC அதிகாரிகள் அங்கு எரிவாயு வெளியானதாக சொல்லப்பட்ட விவசாயியின் விளை நிலத்தில் உள்ள ஆள்துளைக் கிணற்றை பார்வையிட்டனர். 

மேலும் இந்த எரிவாயு வெளியானது குறித்து அங்கு ONGC அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் மட்டுமே வரும் ஆள்துளைக் கிணற்றில் எப்படி எரிவாயு வந்தது என்பது குறித்த விவரங்கள் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gas Comes Out From BoreHole in Andhra


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->