அதிர்ச்சி! லண்டனில் அகிம்சையின் உலகச் சின்னம் காந்தி சிலை சேதம்...! இந்தியா கடும் கண்டனம் - Seithipunal
Seithipunal


மகாத்மா காந்தியின் பிறந்த நாள் நெருங்கி வரும் நிலையில், லண்டன் பல்கலைக்கழகத்திற்கு அருகே அமைந்துள்ள அவரது சிலை அடையாளம் தெரியாதவர்களால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்,லண்டனின் டேவிஸ்டாக் சதுக்கத்தில் 1968ஆம் ஆண்டு நிறுவப்பட்ட காந்தி சிலை வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்டு, அகிம்சையின் உலகச் சின்னமாக திகழ்கிறது.

அந்தச் சிலை சேதமடைந்தது இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.அதுமட்டுமின்றி, இந்திய அரசும், இங்கிலாந்திலுள்ள இந்திய தூதரகமும் கடுமையாக பதிலளித்துள்ளன.

இதுகுறித்து தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டதாவது,"இது ஒரு சிலை மீதான தாக்குதல் மட்டுமல்ல, அகிம்சையின் ஆன்மாவை அவமதிக்கும் செயல்.

சர்வதேச அகிம்சை தினம் வர இன்னும் 3நாட்களே உள்ள நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பது மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gandhi statue global symbol non violence damaged London India strongly condemns


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->