ஜி20 மாநாட்டில் ரிஷி சுனக்கை சந்திக்க இருக்கும் பிரதமர் மோடி.! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தின், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்.பி.க்களின் பலத்த ஆதரவுடன் ரிஷி சுனக் முறைப்படி புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 200 ஆண்டுகளில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் முதன்முறையாக, இளம் பிரதமர் என்ற பெருமையுடன் இந்த பதவியை வகிக்கிறார்.

இதையடுத்து, அரசர் மூன்றாம் சார்லஸ் முறைப்படி புதிய கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ரிஷி சுனக்கை நியமித்த பின்பு, அந்நிகழ்ச்சியில், சுனக்கிற்கு  தீபாவளி இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்துக்களால் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஒளியின் திருவிழா எனப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிஷி சுனக்கின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் நாற்காலியை அலங்கரித்ததற்கு உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அத்துடன், இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்தின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் சந்திக்க இருக்கிறார். இந்தோனேஷியாவின் பாலி தீவில் வருகின்ற நவம்பர் 15 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் இருநாட்டு தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதன் மூலம் இருவருக்கு இடையிலான முதல் சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

g20 conference modi meet rishi sunak


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->