சுதந்திர போராட்ட வீரர் : ஆசிரியராகவும், ஆசானாகவும் விளங்கியவர்... யார் இவர்.? - Seithipunal
Seithipunal


ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியர்..!!

கல்வியாளர் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதெல்லாம் இவரது பெயரை உச்சரிக்க மறந்ததில்லை. அவர்தான் ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த டாக்டர்.ராதாகிருஷ்ணன் பற்றிய ஒரு சிறிய தொகுப்பு...!!

பிறப்பு :

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில பிறந்தார்.

திருமண வாழ்க்கை :

ராதாகிருஷ்ணன் 16 வயதில் சிவகாமு என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் பிறந்தனர்.

கல்வி :

தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ள+ரிலுள்ள 'கௌடி" பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள 'லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்" படித்தார். அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார். தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.ஏ) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.ஏ) பெற்றார். முதுகலை பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார்.

இந்திய விடுதலை போராட்டத்தில் ராதாகிருஷ்ணனின் பங்கு :

பாட நூல்களை தவிர வேதாந்தம், அரசியல் விடுதலை சம்பந்தப்பட்ட நூல்களையும் கற்று தேர்ந்தார். 1918ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்திலும், 1921ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 

மேலும் புகழ்பெற்ற பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். அப்போது நாட்டின் விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தது. அடக்குமுறையை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர். பிரிட்டிஷ் அரசு, பல்கலைக்கழக வளாகத்திற்குள் இராணுவத்தை அனுப்பி, மாணவர்களை ஒடுக்க முயன்றது. ஆனால் துணைவேந்தராயிருந்த டாக்டர்.ராதாகிருஷ்ணன், நாட்டுப்பற்றுமிக்க நல்லறிஞர் என்பதால், மாணவர்கள் சார்பாக நின்றார். இராணுவம், பல்கலைக்கழகத்திற்குள் நுழைவதை தடுத்து நிறுத்தினார்.

இந்திய சுதந்திரத்திற்கு பின் 1948ஆம் ஆண்டு பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார் டாக்டர்.ராதாகிருஷ்ணன். 1949ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் தூதராக நியமிக்கப்பட்டார். இது சோவியத் யூனியனுக்கு ஒரு வலுவான உறவு அமைக்க உதவியது. 1952ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் துணைத் தலைவராக ராதாகிருஷ்ணன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணனின் சேவையையும், உழைப்பையும் கௌரவப்படுத்தும் விதமாக 1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது இந்திய அரசால் வழங்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் பொறுப்பில் இருக்கும்போது நண்பர்கள் அவரின் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியபோது, தனது பிறந்த நாளை அர்ப்பணிப்பு உணர்வுகொண்ட ஆசிரியர்களின் உழைப்பைப் போற்றும் வண்ணம், ஆசிரியர் தினமாகக் கொண்டாட வேண்டும் என டாக்டர் இராதாகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தார். அதன் வெளிப்பாடே இன்று நாம் ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். 1967ஆம் ஆண்டு, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுப்பெற்று சென்னையில் குடியேறினார்.

ராதாகிருஷ்ணனின் மறைவு :

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது 86வது வயதில் 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி சென்னையில் காலமானார். அவரது சேவையைப் பாராட்டி சென்னையில் அவர் இல்லம் அமைந்துள்ள சாலைக்கு 'டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை" எனப் பெயரிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Freedom fighter Dr.Radhakrishnan birthday


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->