மாநிலம் முழுவது இலவச தொலைபேசி மையம்.! மாநில அரசு அறிவிப்பு!!
free std booth in kashmir
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி துண்டிக்கப்பட்ட செல்போன் சேவை, சில நாட்களில் முன்பு ஜம்முவில் மீண்டும் வழங்கப்பட்டது.
காஷ்மீரில் மாற்றும் இரண்டு மாதங்கள் பிறகு கடந்த 14-ந்தேதிதான் செல்போன் சேவை வழங்கப்பட்டது. அதுவும் வெறும் போஸ்ட்பெய்டு இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது. பிரீபெய்டு இணைப்புகள் வைத்திருப்பவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்கள் தொலைபேசி மையங்களுக்கு சென்று வரிசையில் காத்திருந்து தங்கள் இணைப்புகளை மீண்டும் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பொதுமக்களுக்காக காஷ்மீர் முழுவதும் இலவச பொது தொலைபேசி மையங்கள் திறக்கப்படும் என காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இதனால் காஷ்மீர் மக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருக்கும் தங்கள் தொடர்பு தொடர்பு கொள்ள முடியும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.
English Summary
free std booth in kashmir