14 சாலைகளில் போக்குவரத்திற்குத் தடை - இமாச்சலில் நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


14 சாலைகளில் போக்குவரத்திற்குத் தடை - இமாச்சலில் நடந்தது என்ன?

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இந்தப் பனிபொழிவால், இரண்டு தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட மொத்தம் பதினான்கு சாலைகளில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். 

அதன் விவரம் பின்வருமாறு:- "அடல் சுரங்கப்பாதையின் வடக்கு நுழைவாயிலிலிருந்து தர்ச்சா வரை, தர்ச்சா முதல் ஷிங்குலா வரை, ஷிங்குலா முதல் ஜாங்க்சார் வரை, கோக்சர் முதல் லோசார் மற்றும் தண்டியிலிருந்து காது நுல்லா வரை தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 

மேலும், லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் ஆறு சாலைகளும், குலுவில் பகுதியில் நான்கு சாலைகளும் , மற்றவை மாநிலத்தின் பிற பகுதிகளிலும் உள்ளதாக அவசரகால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. பனிபொழிவினால் மணாலி பகுதியில் ரோஹ்தாங் பாஸில் உள்ள அடல் சுரங்கப்பாதையின் வடக்கு வாசல் அருகே சுமார் 500 வாகனங்கள் சிக்கியுள்ளன. 

இவற்றில் முந்நூறுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள வாகனங்கள் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  அதுமட்டுமல்லாமல், பயணிகள் தங்களின் வாகனங்களுக்கு பிரேக் போட வேண்டாம் என்றும், சறுக்குவதைத் தவிர்க்க முதல் கியரில் நத்தை வேகத்தில் செல்லுமாறும் கேட்டுக் கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

fourteen roads closed in himachal pradesh for heavy snowfall


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->