இரவில் தர்பூசணி சாப்பிட்டதால் சோகம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு..! - Seithipunal
Seithipunal


மும்பை, பைதோனி பகுதியை சேர்ந்த தந்தை, தாய் மற்றும் இரு மகள்கள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும் அவர்களது மகள்கள் ஆயிஷா (16), ஜைனப் (13) என 04 பேர் இரவு தர்பூசணி சாப்பிட்ட  நிலையில், உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரவு உறவினர்களுடன் சேர்ந்து சிக்கன் புலாவ் சாப்பிட்ட பிறகு, நள்ளிரவில் குறித்த நான்கு பேர் மட்டும் தர்பூசணி சாப்பிட்டுள்ளனர். இவர்களுக்கு அதிகாலையில் வாந்தி, மயக்கம் என நிலைமை மோசமாகி, உடனே அவர்கள் ஜே.ஜே (JJ) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நால்வரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

புலாவ் சாப்பிட்ட உறவினர்கள் நலமாக இருப்பதால், தர்பூசணியே 'ஃபுட் பாய்சன்' ஆகி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து, மீதமிருந்த தர்பூசணி பழத்தின் மாதிரிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடற்கூறுகள் தடயவியல் ஆய்வகத்திற்கு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

தர்பூசணி போன்ற பழங்களில் நிறத்தை அதிகரிக்க ஊசி மூலம் ரசாயனங்கள் செலுத்தப்படுகிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. கோடை காலத்தில் வெட்டி வைக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழைய உணவுகள் விஷயத்தில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Four members of the same family die in succession after eating watermelon at night


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->