காங்கிரஸ் போஸ்டர்களை மட்டும் அப்புறப்படுத்துவியா.. மாநகராட்சி ஊழியர்களை தாக்கிய முன்னாள் காங்கிரஸ் எம்.எல். ஏ..!
Former Congess MLA cane abuses sdmc Staff
மாநகராட்சி ஊழியர்களை அடித்த காங்கிரஸ் எம். எல். ஏ வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
டெல்லியின் ஓக்லா பகுதியை சேர்ந்தவர் முகமது ஆசிஃப் கான். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல். ஏ வான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் நால்வரை குச்சியால் அடித்து காலால் எட்டி உதைத்து உக்கி போட வைத்திருந்தார்.
இந்த வீடியோ சமீபத்தில் வைரலாக இந்த வீடியோவில் இருந்த நால்வரும் மாநகராட்சி ஊழியர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ஓக்லா பகுதியில் இருக்கும் எனது வீட்டருகே உள்ள காங்கிரஸ் கட்சியின் பேனர்களையும் போஸ்டர்களையும் சிலர் கிழிப்பதை அறிந்தேன்.

அங்கு சென்று அவர்களிடம் ஏன் காங்கிரஸ் கட்சியின் பேனர்களை மட்டும் அப்புறபடுத்துகிறீர்கள் ஆம் ஆத்மியின் பேனர்களை அகற்றுவதில்லை ஏன் என கேட்ட போது அவர்கள் எனக்கு சரியாக பதில் கூறவில்லை. இதனால், அவர்களுகு பாடம் புகட்ட முடிவு செய்து அப்படி செய்தேன் என தெரிவித்தார்.
இந்நிலையில், மாநகராட்சி ஊழியர் ஒருவர் கூறும் போது முன்னாள் எம் எல் ஏ மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Former Congess MLA cane abuses sdmc Staff