வெளிநாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்ற தடை விதிப்பு - மத்திய அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வெளிநாட்டு வாகனங்களில் பயணிகளை ஏற்ற தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது, வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள், இந்தியாவில் பயணிகளை ஏற்றிச்செல்லவோ, சரக்குகளை ஏற்றிச்செல்லவோ அனுமதி கிடையாது. 

இந்த வாகனங்கள், மோட்டார் வாகன சட்டத்தின் விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்ற வேண்டும். உரிய ஆர்.சி. புத்தகம், ஓட்டுனர் உரிமம், சர்வதேச ஓட்டுனர் அனுமதி, உரிய காப்பீட்டு பாலிசி, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் ஆகியவற்றை இந்த வாகனங்கள் வைத்திருக்க வேண்டும். 

ஆவணங்கள் ஆங்கிலத்தை தவிர வேறு மொழியில் இருந்தால், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Foreign cars not allowed to passenger travel


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->