உல்லாச அழைப்பு... உயிரைப் பறித்த மாத்திரை...! நிச்சயதார்த்தம் முடிந்த சில மணிநேரங்களில் புதுமாப்பிள்ளை பலியான சோகம்...!
flirtatious call pill that took his life tragedy newlywed death just hours after engagement
உல்லாச வாழ்க்கையில் நீண்ட நேரம் உற்சாகமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில், சில ஆண்கள் மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. உடல் சக்தியை தற்காலிகமாக உயர்த்தும் இவ்வகை மருந்துகள், தவறான முறையில் எடுத்துக்கொள்ளப்பட்டால் உயிருக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

அந்தவகையில், அரியானா மாநிலத்தைச் சேர்ந்த 29 வயதுடைய ரோஹித் லால் என்ற இளைஞர், அதிக அளவில் இத்தகைய மாத்திரைகளை உட்கொண்டதன் விளைவாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் புதுடெல்லியில் உள்ள இந்திய தரக் கவுன்சிலில் பணியாற்றி வந்ததுடன், குருகிராம் பகுதியில் வாடகை இல்லத்தில் தங்கி வாழ்ந்து வந்தார்.
சமீபத்தில் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்த நிலையில், விரைவில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.இந்தச் சம்பவத்தன்று, தனது வருங்கால மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அவர் வருவதற்கு முன்பே ரோஹித் லால் படுக்கையிலேயே உயிரிழந்திருந்தார் என்பது பின்னர் தெரியவந்தது.
இதற்கிடையில், வழக்கம்போல் பணிக்கு செல்லாததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள், தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றும் பதில் இல்லாததால், அவரது வீட்டிற்கு நேரில் சென்றனர். கதவு திறக்கப்படாததால் அவர்கள் கவலை அடைந்து காவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, ரோஹித் லால் உயிரிழந்த நிலையில் படுக்கையில் கிடந்ததை கண்டனர். அருகில் பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் சிதறிக் கிடந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. உடல் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், அதிக உற்சாகத்தால் தேவையற்ற அளவில் மாத்திரைகளை உட்கொண்டதே இந்த உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவ தரப்பில், இவ்வகை மருந்துகளை அளவுக்கு மீறி பயன்படுத்துவது மாரடைப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்படுகிறது.பிரேத பரிசோதனை முடிந்த பின்னர், உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம், மருத்துவ ஆலோசனையின்றி மருந்துகளை பயன்படுத்துவதின் ஆபத்துகளை மீண்டும் நினைவூட்டும் எச்சரிக்கை நிகழ்வாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
flirtatious call pill that took his life tragedy newlywed death just hours after engagement