மீனவர்களே.. மே 21 வரை "கடலுக்கு செல்ல வேண்டும்"! - 5 மாநிலங்களுக்கு எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


இலங்கை ஒட்டிய மன்னர் வளைகுடா பகுதியில் இலவும் குறைந்த காற்றழுத்து தாழ்வு நிலையின் காரணமாக வரும் 21 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

அதேபோன்று தென் மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் வரும் மே 21 ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென் தமிழக மற்றும் மன்னார் வளைகுடா இடையே வரும் மே 20ம் தேதி வரை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடலில் 40 முதல் 45 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும். இது 55 கிலோமீட்டர் வேகம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது‌. 

வரும் மே 21 ஆம் தேதி அதே பகுதியில் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் அது 65 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

அதேபோன்று வருமே இருபதாம் தேதி வரை தெற்கு கேரளா மற்றும் வடக்கு இலங்கை ஒட்டிய கடற் பகுதியில் 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலமான கடல் காற்று வீச கூடும். இந்த காற்றின் வேகம் 55 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

அதேபோன்று வரும் மே 21ஆம் தேதி கேரளா மற்றும் கர்நாடகாவை ஒட்டிய கடற் பகுதியில் 65 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும், அன்றைய தினமே வடக்கு இலங்கை மற்றும் அந்தமான் ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் 55 கிலோமீட்டர் வரை காற்றின் வேகம் இருக்கும் யாவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் தெற்கு ஆந்திராவை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் இன்று இரவு வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் எனவும், அலைகளின் ஆக்ரோஷம் அதிகமாக காணப்படும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேற்கண்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடித்துச் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fishermen warning for Tamil Nadu Puducherry Karnataka Kerala Andhra


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->